Thursday, December 29, 2016

எப்படியெல்லாம் அரிசி கழுவிய தண்ணீரைப் பயன்படுத்த முடியும்?

·         அரிசி கழுவிய தண்ணீரை  வீணாக்காமல் சருமத்தை அழகு படுத்தப் பயன்படுத்தலாம்.
·         அரிசி கழுவிய தண்ணீர் கொண்டு முடியை அலசினால் முடி உதிர்வது தடுக்கப்படுகிறது.
· அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு சுண்டைக்காய் கார குழம்பு, பாகற்காய் போன்றவற்றைச் சமைக்கும் போது பயன்படுத்தலாம். குறிப்பாக, துவர்ப்புச் சுவையுடைய காய்கறிகளைச் சமைக்கும் போது, இந்த தண்ணீரைப் பயன்படுத்தினால்,துவர்ப்பு குறையும். சமையலில் இந்த தண்ணீரைப் பயன்படுத்துவதால் உணவின் சுவை கூடும்.

·    அரிசி கழுவிய தண்ணீருடன் கொஞ்சம் சாதாரண தண்ணீரைக் கலந்து, நன்கு கொதிக்க வைத்துப் பின் குழந்தைகளைக் குளிப்பாட்டப் பயன்படுத்தலாம். இது குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் வலியைப் போக்கி நல்ல தூக்கத்தைத் தரும்.
        உடல் முழுவதும் குளிக்க வைப்பதால் உடலுக்கு தேவையான பலம் கிடைக்கும். இதனால் சீக்கிரமாக கால்களுக்கு பலம் கிடைத்து குழந்தைகள் வேகமாக நடக்க ஆரம்பிக்கும். அவை இன்றும் கிராம புறங்களில் பின்பற்றப்படுகிறது.
·   அரிசியை சுத்தமான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, அரிசியை நன்றாக 2 முறை கழுவிக்கொள்ள வேண்டும், பின்னர் அந்த நீரை தலையை அலசவும் முகம் கழுவவும் பயன்படுத்தலாம்.நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைத்து முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமமும் பொழிவு பெறும்.
·    இதனை அப்படியே குடிக்காமல், அரிசியை வேகவைத்து வடித்த தண்ணீரோடு உப்பு கலந்து குடிக்கும்போது சத்துக்கள் வீணாகமல் முழுமையாக கிடைக்கும். இந்நீரில் கார்போஹைட்ரேட்டுகளும், ஊட்டச்சத்துகளும் வளமாக நிறைந்துள்ளதால் இதனை குடிப்பதன் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும். நன்றி : என் நாடு இந்தியா, 22-Dec-2016


No comments:

Post a Comment